அதிர்ச்சியில் உறைந்த குடிமகன்கள்.! டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்வு.!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில்  தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பொதுவாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8மணி வரை மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. டாஸ்மாக்கில் சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாயும் நடுத்தர, பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை20 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை தற்போது டாஸ்மாக் நிர்வாகம்  உயர்த்தியுள்ளது. அதன்படி, குறைந்த ரக மது பானங்கள் விலையில் 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்கள் விலையில்300 ரூபாயும்  உயர்ரக மதுபானங்கள் விலையில் 500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜானி வாக்கர், பெய்லி ஐரீஷ்,  ஜெ & பி விஸ்கி உள்ளிட்ட மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமல்லாது பார்களுக்கு வெளிநாட்டு மதுவகைகளை விற்பனை செய்யும் மொத்த விற்பனை கூடங்களிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் மட்டுமல்லாது தனியார் பார்கள், கிளப்களிலும் வெளிநாட்டு மதுவகைகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மது பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.