அல்ஜீரியாவுடன் இந்தியக் கடற்படையின் முதல் கூட்டுப்பயிற்சி.!

Scroll Down To Discover
Spread the love

நல்லெண்ண அடிப்படையில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐஎன்எஸ் தாபார் கப்பல், அல்ஜீரிய கடற்படைக் கப்பலான ‘எஸ்ஸட்ஜெர்’ உடன் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கடல்சார் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயிற்சி அல்ஜீரியக் கடற்பகுதியில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த திட்டமிட்ட நடவடிக்கை, தொலைத்தொடர்பு நடைமுறைகள் போன்ற பன்முகத் தன்மை வாய்ந்த நடவடிக்கைகள் இந்திய மற்றும் அல்ஜீரியக் கப்பல்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டன. இருதரப்பு கடற்படைகளால் பின்பற்றப்படும் இயக்க முறைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவும், மேம்பட்ட இயங்கு தன்மை மற்றும் இருதரப்புக் கலந்துரையாடல்களை அதிகரிப்பதற்கும், எதிர்காலத்தில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி ஏதுவாக இருந்தது.