இந்திய அளவில் 7 கோடி தடுப்பூசி போட்டு உத்தரபிரதேச மாநிலம் முதலிடம்!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதல் முறையாக நேற்று முன்தினம் 1 கோடிக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தினந்தோறும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை மக்களுக்கு போட்டு வருகிறது. இந்திய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்ட நேற்று முன்தினமும், மாநிலத்தில் 30 லட்சத்துக்கு அதிகமானோர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக 7 கோடி தடுப்பூசி பயன்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தரபிரதேசம் எட்டியிருக்கிறது.

கடந்த 17-ந்தேதிதான் 6 கோடி மைல்கல்லை உத்தரபிரதேசம் எட்டியிருந்தது. அடுத்த 10 நாட்களில் 1 கோடிக்கு மேல் தடுப்பூசி போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா (5.64 கோடி), ராஜஸ்தான் (4.23 கோடி), மேற்கு வங்காளம் (3.86 கோடி), தமிழ்நாடு (3.08 கோடி), கேரளா (2.77 கோடி) போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.