ரிலையன்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி : முதல் கட்ட மருத்துவ பரிசோதனை அனுமதி.!

Scroll Down To Discover
Spread the love

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு முதல் கட்ட மருத்துவபரிசோதனை முயற்சி மேற்கொள்ள தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ரிலையன்ஸின் துணை நிறுவனமான, ‘ரிலையன்ஸ் லைப் சயின்சஸ்’ இரண்டு ‘டோஸ்’ செலுத்தும் வகையிலான தடுப்பூசியை தயாரித்துள்ளது. தற்போது முதல் கட்ட மருத்துவபரிசோதனை முயற்சியை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட சோதனையின் வாயிலாக, நிறுவனம், அதன் தடுப்பூசியின் செயல்பாடு மற்றும் அதனால் பாதிப்புகள் ஏதாவது ஏற்படுமா என்பது உள்ளிட்ட, பல தகவல்களை அறிந்து கொள்ளும். இந்த முதல் கட்ட சோதனை முயற்சி 58 நாட்கள் நடைபெறும்.

இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின், இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெறும் என்றும் தெரிகிறது. இருப்பினும், ரிலையன்ஸ் லைப் சயின்ஸ் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடவில்லை. தற்சமயம் இந்தியாவில், ஆறு நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.