ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களை எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர் தலிபான்கள் – அமெரிக்கா குற்றச்சாட்டு

Scroll Down To Discover
Spread the love

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஜனநாயக ஆட்சி கிடையாது. ஷரியத் சட்டத்தின்படிதான் ஆட்சி நடக்கும் என, தலிபான் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகள் ஒருவரான வஹீதுல்லாஹ் ஹஷிமி சமீபத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், தலிபான்கள் தங்களை பணிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என, காபூலில் பெண் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ், ‘ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை தலிபான்கள் எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர். அமெரிக்க பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர். காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு இது அதிகரித்துள்ளது; இது கண்டனத்திற்கு உரியது’ எனத் தெரிவித்துள்ளார்.