சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு.!

Scroll Down To Discover
Spread the love

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

கொரோனாவால் மக்கள் வருவாய் இன்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்கு உள்ளாகி வரும் சூழலில், சிலிண்டர் விலை உயர்த்தப் பட்டிருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என கூறப்படுகிறது. கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 25 ரூபாய் அதிரடியாக உயர்த்தி மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், ரூ.852- இல் இருந்து 877 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையாகிறது.