காங்கிரஸ் தலைவர்கள் ட்விட்டர் விதிமுறைகளை மீறியதால் கணக்குகளை முடக்கினோம் – ட்விட்டர் விளக்கம்

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை வெளியிட்டதற்காக, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘ ட்விட்டர்’ பக்கங்களை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது.

இதுகுறித்து ‘ ட்விட்டர்’ செய்தித்தொடர்பாளர் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- கம்பெனியின் விதிமுறைகள் ஒவ்வொருவருக்கும் பாரபட்சமின்றி அமல்படுத்தப்படுகின்றன. கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை அடையாளப்படுத்தும் புகைப்படம் வெளியிடப்பட்டு இருப்பதாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் புகார் தெரிவித்தது.

அதை ஆய்வு செய்தபோது, ‘ ட்விட்டர்’ நிறுவன விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதை அறிந்தோம். எனவே, அந்த கணக்குகள் முடக்கப்பட்டன. இதுபோல் நூற்றுக்கணக்கான பதிவுகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இனியும் தொடர்ந்து எடுப்போம். சில தனிப்பட்ட தகவல்கள், மற்றவற்றை விட ஆபத்தானவை. எனவே, தனிநபர்களின் தனியுரிமையை எப்போதும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.