ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம்..!

Scroll Down To Discover
Spread the love

நாடு முழுதும் தற்போது இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., இயந்திரங்கள் உள்ளன. பல நேரங்களில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தன.

அவற்றை பரிசீலித்த ரிசர்வ் வங்கி, ஏ.டி.எம்., இயந்திரங்களில் உரிய நேரத்தில் பணம் நிரப்பாத வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. அக்., 1 முதல் தொடர்ச்சியாக 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருக்கும் ஏ.டி.எம்.,மின் வங்கிக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.