வீட்டில் ரெய்டு..முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு.!

Scroll Down To Discover
Spread the love

அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. அ

ரசின் ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக, 1.20 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் நேற்று போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் வசிக்கும் மாஜி அமைச்சர் வேலுமணி வீடு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் வேலுமணி மனைவியின் சகோதரர் சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. வேலுமணி வீட்டில் 10 பேர் கொண்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருங்கிய நபர் வீடுகளில் சோதனை நடக்கிறது. கோவையில் 35, சென்னையில் 15 இடங்களிலும், காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் வேலுமணிக்கு தொடர்புடைய தலா ஒரு இடத்திலும் சோதனை நடக்கிறது.சென்னையில் எம்எல்ஏ., விடுதியில் உள்ள அறையிலும் சோதனை நடத்தினர். அங்கிருந்த வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில், வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், சந்திரசேகர், முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, கு.ராஜன் உள்ளிட்ட 7 பேர் மற்றும் 10 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திமுகவின் ஆர்எஸ்பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.