பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்திய 20 பேர் கைது..!

Scroll Down To Discover
Spread the love

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்து கோவிலில், முஸ்லிம்கள் ஆவேச தாக்குதல் நடத்தியுள்ளனர். தீ வைக்கப்பட்டதால் கோவில் கடுமையாக சேதமடைந்து

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கோவில் சேதமடைந்துள்ளது. அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஆக்ரோஷத்துடன் தாக்குதல் நடத்தியதால் போலீசாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது, தானாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்.

இதுபோன்ற சம்பவங்கள் உலகளவில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக கூறிய நீதிபதி, நடந்த சம்பவம் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவும், கோவிலை புனரமைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று இந்த வன்முறை தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.