கோவிலில், வழிபாடு நடத்துவதில் கிராம மக்களுக்கு எதிராக அதிகாரிகள் : சாலை மறியலில் ஈடுபட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே, உள்ள சுந்தர நாச்சியார் புரம் பகுதியில், அம்பேத்கர் காலனியில் சக்திகாளியம்மன் என்ற கோவில் உள்ளது.

இந்த கோவில் சாமி கும்பிடுவது, மற்றும் திருவிழா நடத்தும் சம்பந்தமாக வருவாய்த்துறை காவல்துறை அதிகாரியிடம் அனுமதி வாங்கி வழிபாடு செய்த பொழுது அதே பகுதியை சேர்ந்த வர்கீஸ் நந்தன் பெரியாண்டவர் ஆகிய மூன்று நபர்களும், வழிபாடு செய்வதற்கு எதிராகவும் , வழிபாடு செய்தவர்கள் மீது உங்களுக்கு இந்த இடத்தில் உரிமை இல்லை, நாங்கள்தான் வழிபாடு செய்வோம் என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, கூறப்படுகிறது.

இதையடுத்து ,நேற்று திருவிழா நடத்திய போது, இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதே பகுதியை, சேர்ந்தவர் வீரபாண்டி என்ற 11. வயது ,சிறுவனை தாக்கியதாகவும், அதை தட்டி கேட்காமல், சார்பு ஆய்வாளர் சிறுவனை, மேலும் தாக்கி காயப்படுத்தியதாகவும், இதற்கு உடந்தையாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை செயல்படுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத்
சரவண கார்த்திகேயன் தலைமையில், கிராம மக்கள் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறை அனுமதி இல்லாமல் காவல்துறையில் புகார் அளிக்காமல், இவர்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் எடுத்துரைதத்து, அப்புறப்படுத்த காவல் துறைக்கு உத்தரவிடட்டார். அதையடுத்து, 50 பேர் கைது செய்யப்பட்டு, திருமணம் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், தீர்வு கிடைக்கவில்லை என்றால், மாபெரும் போராட்ட நடத்தப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

செய்தி: Ravi Chandran