பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை – குடியரசு துணைத் தலைவர்

Scroll Down To Discover
Spread the love

பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது நமது கூட்டுக் கடமை ஆகும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். இத்தகைய பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இன்னும் விரிவான மற்றும் சிறப்பான பாதுகாப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘பெற்றோரை இழந்த குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சமுதாய அதிகாரமளித்தல் படை (ஃபோர்ஸ்)’-ல் இருந்து குடியரசு துணைத் தலைவர் மாளிகைக்கு வந்திருந்த குழந்தைகளிடம் உரையாடிய திரு நாயுடு இவ்வாறு கூறினார். மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் பண்டா பிரகாஷுடன் குடியரசு துணைத் தலைவரைக் காண அவர்கள் வந்திருந்தனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் இந்தியாவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து டாக்டர் பிரகாஷுடன் விவாதித்த குடியரசு துணைத் தலைவர், அவர்களது மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை பாராட்டினார். பெற்றோரை இழந்த குழந்தைகளின் வாழ்வு மேம்படுவதற்கான அவரது நல் முயற்சிகளுக்கு அனைத்து ஆதரவையும் வழங்க உறுதியளித்தார்.

ஊக்கத்திற்கும், ஆதரவுக்கும் குடியரசு துணைத் தலைவருக்கு டாக்டர் பாண்டா பிரகாஷ் நன்றி தெரிவித்தார். இந்த விஷயத்தை இரு மூத்த அமைச்சர்களான மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு குடியரசு துணைத் தலைவர் பின்னர் கொண்டு சென்றார்.