5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

Scroll Down To Discover
Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று (02.08.2021) மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்டைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சென்னை வந்ததும் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார் ஜனாதிபதி . மாலை 5 மணிக்கு சட்டமன்றத்தில் விழா துவங்குகிறது. விழாவில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தலைமைச் செயலகம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் வாழை மர தோரணம், வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.