மதுரை : பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பெயர் சூட்ட ஆர்ப்பாட்டம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு, அன்னை மீனாட்சியின் பெயர் சூட்ட வலியுறுத்தி, மதுரை பழங்காலத்தில் வீர இந்து சேவா இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வீர இந்து சேவா மாநில பொதுச் செயலர் காவி முத்துராஜ் ஆன்மீக பிரிவு தலைவர் மகேந்திரன் சுவாமிகள், மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகி ஜெகதீசன், கொள்கை பரப்பு இணைச் செயலர் திருச்செல்வம், இளைஞரணி தலைவர் வினோத் கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகி ஜெயபாண்டி நன்றி கூறினார்
செய்தி : ரவிசந்திரன்