கடற்படையில் சாதனைகள் புரிந்த கப்பல்களுக்கு விருது..!

Scroll Down To Discover
Spread the love

மேற்குக் கடற்படை மண்டலத்தில் உள்ள போர்க்கப்பல்கள் கடந்தாண்டு புரிந்த சாதனைகளுக்கான விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று (ஜூலை 23, 2021) நடைப்பெற்றது. கொவிட்- 19 பெருந்தொற்றால் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேற்குக் கடற்படை கட்டுப்பாட்டு மண்டல தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஆர் ஹரி குமார், தலைமை விருந்தினராகக் கலந்துக் கொண்டார். 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரை சிறப்பாக செயலாற்றிய கப்பல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த விழா எளிமையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் சாதனைகள் புரிந்த கப்பல்களின் எண்ணிக்கை அதிகம். கடற்படை இயக்கம், பாதுகாப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 20 கோப்பைகள் வழங்கப்பட்டன.

ஐஎன்எஸ் கொல்கத்தாவிற்கு ‘சிறந்த கப்பல்’ விருது வழங்கப்பட்டது. ஐஎன்எஸ் தாரகாஷ், ‘மிகுந்த உற்சாகமான’ கப்பல் விருதை தட்டிச்சென்றது. டேங்கர்கள் மற்றும் ரோந்து கப்பல்கள் பிரிவில் ஐஎன்எஸ் தீபக் ‘சிறந்த கப்பலுக்கான’ விருதைப் பெற்றது.