அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களை விடுவிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்..!

Scroll Down To Discover
Spread the love

ஹரியானாவின் பரிதாபாதில் நடந்து முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:- தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் பல கோவில்கள் உள்ளன.

கோவில்களில் யார் பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, அரசு ஏன் தீர்மானிக்க வேண்டும்.

எனவே, அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதை தடுக்கும் கடுமையான சட்டத்தை இயற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.