சீனாவில் புதிதாக பரவும் குரங்கு பி’ வைரஸ் : ஒருவர் பலி..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் பலியானார்.

கால்நடை மருத்துவர் ஒருவர் 53, இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த மே 27ல் மரணமடைந்தார்.

இவரது எச்சில், ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘குரங்கு பி’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் முதல் முறையாக பலியானது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932ல் கண்டறியப்பட்டது. இது நேரடி கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவும். இதில் இறப்பு சதவீதம்(70–80) அதிகம். குரங்கு, மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மனிதர்களை ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கும் போது 1–3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும். பின் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும்.