ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது…?

Scroll Down To Discover
Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 415 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 8 ஆயிரத்து 46 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 20 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.