ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை: மாநிலங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வழங்கியது மத்திய அரசு..!

Scroll Down To Discover
Spread the love

ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.75,000 கோடியை வழங்கியுள்ளது.

இந்த நிதி, வரிவசூலிப்பிலிருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜிஎஸ்டி இழப்பீட்டுடன் கூடுதலாக வழங்கப்படும் நிதியாகும்.

கடந்த 28.05.2021ம் தேதி நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று, மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 2020-21ம் நிதியாண்டில் இதேபோன்ற வசதிக்கு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் படி இந்த தொகை வழங்கப்பட்டது.

அப்போது இதே ஏற்பாட்டின் படி மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இந்த ரூ.1.59 லட்சம் கோடி, இழப்பீடு ரூ.1 லட்சம் கோடிக்கும்(வரி வசூல் அடிப்படையில்) அதிகமாக இருக்கும். இது இந்த நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த தொகை ரூ.2.59 லட்சம் கோடி, 2021-22ம் நிதியாண்டில் ஏற்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவ, மத்திய நிதியமைச்சகம் 2021-22ம் நிதியாண்டில் ரூ.75 ஆயிரம் கோடியை(இந்த நிதியாண்டின் மொத்த பற்றாக்குறையில் சுமார் 50 சதவீதம்) ஒரே தவணையாக இன்று வழங்கியது. மீதத் தொகை, 2021-22ம் ஆண்டு இரண்டாவது பாதியில் சீரான தவணையாக வழங்கப்படும்.

இந்த நிதி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொது செலவு, சுகாதார கட்டமைப்பு மற்றும் உள்ள கட்டமைப்பு திட்டங்களை திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.