உத்வேகம் அளிக்கும் நபர்களை பொதுமக்களே பத்ம விருதுக்கு பரிந்துரைக்கலாம்: நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளித்து பெரிதும் பிரபலம் அடையாதவர்களை மக்களின் பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இவை செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.


இதுதொடர்பான சுட்டுரைச் செய்தியில், “அடிமட்ட அளவில் தன்னிகரற்ற பணியில் ஈடுபடும் ஏராளமான திறமைவாய்ந்த மக்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டதோ அல்லது கண்டதோ இல்லை.

இதுபோன்ற எழுச்சியூட்டும் மக்களை நீங்கள் அறிவீர்களா? மக்களின் பத்ம விருதுக்கு (#PeoplesPadma) அவர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம். செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும். padmaawards.gov.in”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.