‘ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாடு’ : “கோவின் தொழில்நுட்பம்” எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்

Scroll Down To Discover
Spread the love

இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரட்டன், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகள் ஜி20 அமைப்பில் உள்ளன.

ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் மாநாடு நடைபெற்றது. அதன் இரண்டாம் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தடுப்பூசி பணிக்காக இந்தியா உருவாக்கிய ‘கோவின்’ வலைத்தளம் தடுப்பூசி பணிக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது என்பதை விளக்கிக் கூறினார். கோவின் தொழில்நுட்பம் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கு வர்த்தக பலன்களை விட மனிதாபிமானம்தான் முக்கியம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.