பாலமேடு பேரூராட்சியில் ட்ரோன் கருவி மூலம்  கிருமி நாசினி மருந்து தெளிப்பு.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  டிரோன் கருவி மூலம்  கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கருடா ஏரோ ஸ்பேஷ் சார்பாக பாலமேடு பேரூராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையம், கோவில்கள், வாடிவாசல் பகுதி, தெருக்கள், கடை வீதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், உள்ளிட்ட பல இடங்களில் கிருமி நாசிமி மருந்து தயாரித்து ட்ரோன் கருவியை பறக்கவிட்டு மருந்து தெளித்தனர்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, வரி தண்டலர் கிரண்குமார், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். ட்ரோன் கருவி மூலம் வானில் பறக்கவிட்டு மருந்து தெளிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.