ஜெய்ஹிந்த் முழக்கம் : திமுகவை திருப்திப்படுத்த வேண்டும்..கொங்குநாடு மக்கள் கட்சி ஈஸ்வரன் பேச்சு – அர்ஜூன் சம்பத் கண்டனம்…!

Scroll Down To Discover
Spread the love

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய எம்.எல்.ஏ கொங்கு ஈஸ்வரன், ‘சென்ற ஆளுநர் உரையில் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என்று இருந்தது. ஆனால், இந்த ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை. அந்த வார்த்தை இடம்பெறாதது வரவேற்கத்தக்கது என்ற வகையில் பேசியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு ஈஸ்வரன் அவர்கள் ஜெய்ஹிந்த் கோஷம் கவர்னர் உரையின் நிறைவில் இல்லை!எனவே திமுக ஜெய்ஹிந்த் கோசத்தை தவிர்ப்பதன் மூலம் திமுக தமிழகத்தை முன்னிறுத்தி இருக்கின்றது என்று சட்டசபையில் பேசியுள்ளார். அவரது பேச்சை முதலமைச்சர் மறுத்து, எதிர்த்து,கருத்து தெரிவிக்கவில்லை!

ஜெய்ஹிந்த் முழக்கத்தை உருவாக்கியவர் டாக்டர் செண்பகராமன் பிள்ளை என்கின்ற தமிழர்தான். இந்திய நாட்டின் விடுதலைக்காக ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை செய்த தியாகமும், சேவையும் அளவிடற்கரியது. எது எப்படியோ போகட்டும் ஈஸ்வரன் அவர்கள்
டாக்டர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

திமுகவை திருப்திப்படுத்த வேண்டும். மு.க.ஸ்டாலின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரன் இப்படி பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன்! இப்படியான பேச்சுக்கள் காக்காய் பிடிக்கும் பேச்சுக்கள்! அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பேசக்கூடிய பேச்சுக்கள்! சந்தர்ப்பவாத பேச்சுக்கள்! என்றுதான் நான் கருதுகின்றேன்.

இருந்தபோதிலும் செண்பகராமன் பிள்ளையால் உருவாக்கப்பட்ட ஜெய்ஹிந்த் முழக்கம் நேதாஜியால் முத்துராமலிங்கத் தேவரால் தமிழகத்தில் உள்ள அனைத்து தேசபக்தர்களாலும் உச்சரிக்கப்பட்ட எழுச்சிமிகு கோஷம்! ஈஸ்வரன் அவர்களே, இந்த வரலாறு உங்களுக்குத் தெரியும், இருந்தாலும் திமுக சகவாசம் உங்களை இப்படி எல்லாம் பேச வைக்கிறது.

ஈஸ்வரனின் பேச்சு கண்டிக்கத்தக்கது ஜெய்ஹிந்த் முழக்கம் கவர்னர் உரையில் இடம்பெறாதது ஒரு தற்செயல் நிகழ்வுதான் நாம் கருதி கொண்டிருந்தோம். ஆனால் இதன் பின்னாலும் இந்து விரோத, இந்திய விரோத, பிரிவினைவாத சிந்தனை உள்ளது என்பது கொங்குநாடு ஈஸ்வரன் பேச்சின் மூலம் தெளிவாகிறது. ஸ்டாலின் இதனைத் தெளிவு படுத்த வேண்டும். இதுகுறித்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.