லடாக்கில் ராணுவ வீரர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடல்.!

Scroll Down To Discover
Spread the love

லடாக்கில் உள்ள கரு ராணுவ மையத்தில் இந்திய ராணுவத்தின் 14 கார்ப்ஸ் வீரர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று உரையாடினார்.

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தில் நாட்டுக்கு ஆற்றும் சேவையின் போது உயிரிழந்த தீரம் மிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங், அவர்களது மிகப்பெரிய தியாகத்தை நாடு என்றைக்கும் மறக்காது என்றார்.

சம்பவத்தின் போது இந்திய ராணுவம் வெளிப்படுத்திய சிறப்பான வீரத்தை பாராட்டிய அவர், பாதுகாப்பு படைகள் குறித்து நாடு பெருமை படுவதாக கூறினார்.

இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆனால், சீண்டப்பட்டால் தக்க பதிலடியை கொடுக்கும், என்று அமைச்சர் கூறினார். அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசு விரும்புவதாக கூறிய அவர், ஆனால் அதே சமயம் நாட்டின் பாதுகாப்பில் எக்காரணத்தை கொண்டும் சமரசம் இல்லை என்றார்.

பாதுகாப்பு படைகளுக்கு அனைத்து ஆதரவையும் வழங்க உறுதி கூறிய அமைச்சர், எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட வலுவான ராணுவம் என்பதே பிரதமர் மோடி தலைமையிலான அரசின் லட்சியம் என்றார்.