பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்பு : காலக்கொடு செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

Scroll Down To Discover
Spread the love

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்டரீதியாகச் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது

இதற்கிடையே, வரும் 30-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது அவசியம் என்றும், அதனைச் செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும், ஜூலை 1-ம் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.பிக்சட் டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு 10 சதவீதத்துக்குப் பதில் 20 சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும் எனவும், 15G, 15H படிவங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக 3 மாதம் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய இணை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதன்படி, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலஅவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.