மதுரை வண்டியூர் கண்மாயில் ஆகாயத் தாமரை அகற்றப்படுமா?

Scroll Down To Discover
Spread the love

மதுரை வண்டியூர் கண்மாயில் உள்ள தண்ணீரை மறைக்கும் அளவுக்கு ஆகாயத் தாமரை வளர்ந்துள்ளது. இதனால், கண்மாயினுள் மீன் பிடிக்கவும், அசுத்தமாக காணப்படுகிறது.

இதை மதுரை பொதுப்பணித்துறை பாசனப் பிரிவு அலுவலர்கள் கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றி சுத்தம் செய்ய இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், கண்மாயை ஆழப்படுத்தினால், மதுரையில், மேலமடை, யாகப்பநகர், பாண்டி கோயில், வண்டியூர் பகுதிகளில் தொடர்ந்து நீர் ஊற்று ஏற்பட்டு, ஆண்டுதோறும் ஆழ்துளையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்பது, இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
செய்தி: Ravi Chandran