மதுரை மேற்கு ஒன்றியம் சத்திரப்பட்டி ஆற்றங்கரை தோட்ட பகுதியில் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் , அரசு டாஸ்மாக் மதுக்கடை என்ற பெயர் பலகையே இல்லை. மேலும், பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் 30 வரை கூடுதல் வசூல் செய்வதாக குடிமகன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கடையில் உள்ள மதுபாட்டில்கள் போலி எனவும் அந்த பாட்டிலில் பூச்சி கிடந்தாதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன் குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சைக்கு உள்ளானது. மேலும், பாட்டில் சரியான முறையில் சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, இந்த மதுக்கடை உண்மையில் அரசு மதுபான கடை தானா, அல்லது தனியார் நடத்தும் கடையா என அப்பகுதி குடிமகன்கள் பேசி வருகின்றனர். சமபந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப் பகுதி குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...