பாலியல் புகார் வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது .!

Scroll Down To Discover
Spread the love

நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருத்தார். புகாரில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மணிகண்டன் ஏமாற்றியதாகவும், மேலும் தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

புகாரை அடுத்து தலைமறைவாகிய மணிகண்டனை கைது செய்ய இரண்டு தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டு தேடி வரப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யதது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.