தங்க நகைகளுக்கு இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாகிறது.!

Scroll Down To Discover
Spread the love

நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இவ்வாறான முறைகேடுகளைத் தடுக்க, தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது.

இதன்படி, தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றான ஹால்மார்க் முத்திரையும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இந்த புதிய முறையை கடந்த ஜனவரி மாதமே நடைமுறைப்படுத்துவது என 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா சூழல் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.