அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Scroll Down To Discover
Spread the love

கடந்த 2019ல் பிரதமர் மோடி ஐ.நா.வின் 14வது பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை டில்லியில் துவக்கி வைத்தார். உலகளவில் நடக்கும் நிலச்சீரழிவு அதிகரித்து வரும் பாலைவன பகுதிகள் வறட்சி ஆகியவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஐ.நா. பொதுச் சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் 14ம் தேதி ஐ.நா. பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை கூட்டுவதாக அறிவித்துள்ளார். இதில் இம்மாநாட்டின் தலைவரான பிரதமர் மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாற்ற உள்ளார். ஐ.நா. உறுப்பு நாடுகள் விவசாய துறை தலைவர்கள் சர்வதேச சமுதாய குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.