போலீசாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய தனியார் நிறுவனத்தினர்

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் பேரையூர் போலீஸாருக்கு ரூ 30 ஆயிரம் மதிப்பில், முகத்திரை, கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் தனியார் நிறுவனத்தினர் வழங்கினர்.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது.
இதையொட்டி, போலீஸார் ஊரடங்கை அமல்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு சிரமமான சூழ்நிலையில், கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துறையினரின் பாதுகாப்புக்காக , கிராமீன் கூட்டா நிதி நிறுவன சார்பில் காவல்துறையினருக்கு ரூ.30 ஆயிரம் செலவில், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கியுள்ளனர்.

அதன்படி, பேரையூர்,சாப்டூர்,எம்.கல்லுப்பட்டி மற்றும் காவல் நிலையங்களிலும் பணிபுரியும் காவல்துறையினர் அனைவருக்கும் முகத்திரைகள், கையுறைகள், முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் , பேரையூர் கிராமீன் கூட்டா மகளிர் சுய உதவிக் குழு நிர்வாக அலுவலர் நவீன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: Ravi Chandran