வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் ஐடியில் மீண்டும் “புளு டிக்” வசதி

Scroll Down To Discover
Spread the love

சமூக வலைத்தளமான டுவிட்டர், உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்விட்டர் பயன்படுத்தும் பிரபலமானவர்களின் தனிப்பட்ட கணக்கை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக புளு டிக் எனப்படும் வசதியை டுவிட்டர் வழங்குகிறது.

அரசு நிறுவனங்கள், பிரபலமான தலைவர்கள், விளையாட்டு, திரைப் பிரபலங்கள், உள்பட பல்வேறு தரப்பினருக்கும் இத்தகைய புளு டிக் வசதியை ட்விட்டர் வழங்குகிறது. இந்த சூழலில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிற்கு வழங்கப்பட்டு இருந்த புளு டிக் வசதி நீக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பான பதிவுகள் ட்விட்டரிலும் இன்று டிரெண்ட் ஆகி இருந்தன. இந்த நிலையில், வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கிற்கு மீண்டும் புளு டிக் வசதி வழங்கப்பட்டுள்ளது.