சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். செங்கல்பட்டில், 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள சர்வதேச யோகா மையத்தில், இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, யோகா சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது இதனைத் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
சினிமா துளிகள்
November 6, 2019

Leave your comments here...