மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1.64 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது – மத்திய அரசு தகவல்

Scroll Down To Discover
Spread the love

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, தடுப்பூசி செலுத்தும் பணி செயல்படுத்தப்படுகிறது. மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தின்கீழ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மாநிலங்களின் நேரடி கொள்முதல் தடுப்பூசிகளையும் வினியோகித்து வருகிறது.

அந்த வகையில் இதுவரை 23 கோடி தடுப்பூசிக்கும் அதிகமான டோஸ்கள், மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 21 கோடியே 71 லட்சத்து 44 ஆயிரத்து 22 தடுப்பூசி டோஸ்கள் (வீணானது உள்பட) பயன்படுத்தப்பட்டு விட்டன.

தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 938 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. இதை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.