ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் 90.64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இன்று மதுரை கூடல் நகர் வந்தது. இது தமிழகத்திற்கு வந்த 35 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.
மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்திற்கு வந்த 3 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ரோல் ஆன் – ரோல் ஆப் (Roll On – Roll Off concept) திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட டேங்கர் லாரிகள் கூடல் நகர் ரயில் நிலையம் வந்தவுடன் சாலை மார்க்கமாக இயங்கி ஆக்சிசன் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 2188.96 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...