மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் வாகைக்குளம் விவசாயிகள் சங்க தலைவர் மகேஸ்வரன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அனீஷ் சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், வாகைக்குளம் கிராமத்துக்கு உட்பட்ட சின்ன வாகைகுளம் காங்கேய நத்தம் அழகு சிறை. காண்டை. புலியை கவுண்டம்பட்டி மாயா நகர் கே வடுகபட்டி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே , கடந்த ஆண்டு முதல் போக சாகுபடி நெல் முறையாக கொள்முதல் செய்யாமல் தேர்தல் காரணம் காட்டி தற்காலிக மாக நிறுத்திவிட்டனர். இதனால், பல்வேறு கிராமங்களில் நெல்கள் குவியல் குவியலாக குவிந்துள்ளது. இந்த நெல் அனைத்தையும் முறையாக கொள்முதல் செய்ய வேண்டும், இப்பகுதியில் பெரிய கிராமமான வாகைக்குளத்தில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறந்து பணியில் ஈடுபடவேண்டும் என, தெரிவித்திருந்தனர்.

செய்தி: Ravi Chandran