பாஜக தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலராக வேலுார் இப்ராஹிம் நியமனம் .!

Scroll Down To Discover
Spread the love

பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுக்கு, ஆறு துணைத் தலைவர்கள், மூன்று பொதுச் செயலர்கள், ஏழு செயலர்கள் மற்றும் பொருளாளர் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில், தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் என்ற அமைப்பை துவக்கி, பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த, வேலுார் இப்ராஹிம் என்று அழைக்கப்படும், சையது இப்ராஹிம், சிறுபான்மைப் பிரிவு, தேசிய செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதற்காக பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் முருகன், சிறுபான்மைப் பிரிவு தேசிய தலைவர் சித்திக் ஆகியோருக்கு, சையது இப்ராஹிம் நன்றி தெரிவித்துள்ளார்.