பயங்கரவாதம் மற்றும் அமைப்புரீதியான குற்றங்களை கட்டுப்படுத்தும் குஜராத் அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்.!

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடி, குஜராத் மாநில முதல்–மந்திரியாக இருந்தபோது, 2004–ம் ஆண்டில் பயங்கரவாதம் மற்றும் கொடிய குற்றங்களை ஒடுக்கும் வகையில், ‘பயங்கரவாதம் மற்றும் அமைப்புரீதியான குற்றங்கள் கட்டுப்பாட்டு மசோதா’ என்ற மசோதாவை குஜராத் அரசு கொண்டு வந்தது இருந்தார். இதனை 3 தடவை இந்த மசோதா, ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. பின்னர், 2015–ம் ஆண்டு, குஜராத் அரசு மீண்டும் இந்த மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை குஜராத் உள்துறை மந்திரி பிரதீப்சிங் ஜடேஜா தெரிவித்தார். இதன்மூலம், பிரதமர் மோடியின் கனவு நிறைவேறி விட்டதாக அவர் கூறினார்.

மேலும் டெலிபோன் ஒட்டுக்கேட்க போலீசாருக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. அதை கோர்ட்டில் சட்டப்பூர்வ ஆதாரமாக அளிக்கவும் அதிகாரம் அளிக்கிறது. மேலும், போலீஸ் அதிகாரி முன்பு ஒருவர் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம், ஆதாரமாக கருதப்படும். குற்றங்கள் மூலம் சம்பாதித்த சொத்துகளை பறிமுதல் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது சர்ச்சைக்குரிய மசோதாவாக கருதப்படுகிறது.