மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால், நாதஸ்வரம், மேளம் உள்ளிட்ட கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா தொற்று முடிவடைந்த நிலையில் இவர்களுக்கான வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதேபோல் தற்போது கொரோனா தொற்று இரண்டாவது நிலை ஏற்பட்டுள்ளதால் இதில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் , இன்று இவர்கள் கொரோனாவை ஒழிப்போம். சமூக இடைவெளியுடன் இருப்போம் என்ற உறுதி மொழியுடன் முதல்வர் முக ஸ்டாலிறுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாதந்திர உதவித்தொகை வழங்க கோரியும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழி வகை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ளார்.பெரும்பாலான மக்கள்  கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அதில் சிலர் இறந்து விடுகின்றனர்.பொதுமக்கள் ஏழை எளியோர் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். நாட்டுப்புறக் கலைஞர்களான கரகாட்டக்காரர்கள், மேளகாரர்கள், நாதஸ்வர வித்வான்கள் மற்றும் சிலர் வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் வருமானம் இன்றியும் மனதளவில் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...