கொரோனா தொற்றை மதிக்காமல் வெளியில் செல்லும் பொது மக்களுக்கு காவல் உதவி ஆணையர் அறிவுரை.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியே செல்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சண்முகம் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆறு சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் அத்தியாவசமின்றி பின் செல்லும் பொதுமக்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு இ பாஸ் மற்றும் அலுவலக அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மற்றவர்களை தடுத்து நிறுத்தி காவல் உதவி ஆணையர் சண்முகம் கரோனா காலங்களில் வெளியில் ஊர்சுற்ற மாட்டேன் மற்றும் சமுக இடைவெளியுடன் பாதுகாப்பாக இருப்பேன் என உறுதி மொழி எடுத்து அதன் பின் அவர்களை திருப்பி அனுப்பினார்.
தேவையில்லாமல், வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அபதார தொகை விதிக்காமல் அவர்களுக்கு அரிவுரை கூறி உறுதி மொழியுடன் திருப்பி அனுப்பும் மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டுகின்றனர் .