மதுரையில் உள்ள மின் மயானத்தில் கூடுதலாக மூன்று யூனிட் மின் தகன மேடை அமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை தத்தனேரி, மூலக்கரை (கீரைத்துரை) பகுதியில் உள்ள மின் மயானங்களில் எரியூட்டப்படுகிறது. உடலை எரியூட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து கூடுதலாக மின் தகன மேடையில் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வலுத்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி ஆணையர் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புதியதாக தகன மேடைக்கு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை தத்தநேரி பகுதியில் ஏற்கனவே இரண்டு தகன மேடையில் உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு மின் தகன மேடையில் அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது, அதேபோன்று மூலக்கரை பகுதியிலும் மின் தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, மதுரையில் கூடுதலாக 3 மின் தகன மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பணி முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை தத்தனேரி மற்றும் கீரைத்துரையில் தலா 2 மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காலகட்டத்தில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் தத்தனேரியில் கூடுதலாக 3 மின்மயானம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அனேகமாக இந்த வாரத்தில் பணி முடிந்துவிடும். இறந்த உடல்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படாது” என்றார்.
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் நம்மிடம்,” கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். தற்போதைய அசாதாரண சூழலில் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளோம்” என்றார். மேலும், மாநகராட்சி அனுமதித்தால், ரோட்டரி சங்கம் சார்பில் கூடுதலாக தகன மேடை  அமைக்க தயாராக உள்ளதாக ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...