இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் – சீரம் தலைவர் தகவல்

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால் மூன்று மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது இயலாத செயல் என சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் முதலில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அப்போது நம்மிடம் போதியளவு தடுப்பூசிகள் இருந்தன. அந்த நேரத்தில் உலக நாடுகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை இந்தியா செய்தது.

இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஒரு போதும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் என்பது ஒரு நாட்டில் உள்ளவர்கள் மட்டும் வரும் என்றில்லை. உலகின் எந்த நாட்டில் வைரஸ் பாதிப்பு இருந்தாலும், நாம் அனைவருக்கும் ஆபத்துதான். இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 3 ஆண்டுகளில் தடுப்பூசி செலுத்தி விடலாம்.

சீரம் நிறுவனம் இதுவரை 20 கோடி தடுப்பூசிகளை டெலிவரி செய்துள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி பணிகள் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகே இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், அதிக அளவிலான தடுப்பூசிகளை நாங்கள் டெலிவரி செய்துள்ளோம். சர்வதேச அளவில் பார்த்தால் அதிக தடுப்பூசிகளை டெலிவரி செய்த நாடுகளில் நிச்சயம் இந்தியா முதல் மூன்று இடங்களில் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.