சென்னை விமான நிலையத்தில் ரூ 1.18 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

Scroll Down To Discover
Spread the love

சார்ஜாவில் இருந்து வரும் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் வழங்கிய தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய உளவுப்பிரிவு அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் கடும் கண்காணிப்பை மேற்கொண்டனர்.

சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய மங்களூருவை சேர்ந்த முகமது அராபத், 24, என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரது பையை சோதனையிட்டபோது, வழக்கத்துக்கு மாறான எடையுடன் ஒரு அட்டைப்பெட்டியும், ரீசார்ஜ் செய்யக்கூடிய எல்இடி அவசர விளக்கும் காணப்பட்டன.
https://twitter.com/capt_ivane/status/1394280574387245056?s=20
அதை பிரித்து பார்த்த போது அதன் பேட்டரிக்குள், வெள்ளி முலாம் பூசப்பட்ட 18 செவ்வக தங்க தகடுகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 24 காரட் தரத்திலான, ரூ 1.18 கோடி மதிப்பிலான 2.39 கிலோ தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.