கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் 2-வது டோஸுக்குமான இடைவெளி மேலும் நீட்டிப்பு.!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த இரண்டு மருந்துகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு மருந்துகளும் குறிப்பிட்ட இடைவெளிக்குள் இரண்டு டோஸ்கள் செலுத்தப்படவேண்டும்.

கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸ் போட்டபிறகு, இரண்டாவது டோஸ் 4 வாரம் முதல் 6 வார இடைவெளிக்குள் செலுத்தப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி 4-6 வாரமாக முதலில் பின்பற்றப்பட்டது. பிறகு இந்த இடைவெளியை 6-8 வாரமாக மாற்றி மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது