கொரோனா 2வது அலை : தமிழகத்தில் 3,070 காவலர்கள் பாதிப்பு – காவல்துறை தகவல்

Scroll Down To Discover
Spread the love

கொரோனா 2-வது அலை தமிழகத்தை ஆட்டி படைத்து வருகிறது. தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி வருகிறார்கள். இதன் காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், சிறப்பு மையங்கள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாம் அலையில் மட்டும் இதுவரை 3,070 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 70 காவலர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர். மேலும், 1,722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,278 பேர் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.