திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஊரடங்கு முன்னிட்டு நான்கு திருவிழாக்கள் ரத்து – கண்காணிப்பாளர் அறிக்கை வெளியீடு.!

Scroll Down To Discover
Spread the love

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிகளவு பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு நாளை முதல் முழு ஊரடங்கு ஆனது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மே 12-ஆம் தேதி நடைபெறும் மாத கார்த்திகை திருவிழா மே 16ஆம் தேதி நடைபெறும் வைகாசி வசந்த உற்சவ திருவிழா மே 25ஆம் தேதி நடைபெறும். வைகாசி விசாக பால்குடம் மே 26-ஆம் தேதி நடைபெறும் பௌர்ணமி கிரிவலம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக கோவில் கண்காணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வருகிற நாட்களில் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில் பக்தர்கள் இன்றி உள் திருவிழா நடை பெறுவதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.