பிகில் படம் ரகளை: ரசிகர்கள் சிறையில்: வாய் திறக்காத நடிகர் விஜய்..!

Scroll Down To Discover
Spread the love

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி கொண்டாட்டமாக கடந்த அக்.,25ம் தேதி வெளியான படம் ‛பிகில். இப்படத்தின் சிறப்பு காட்சிக்காக ஒரு போராட்டம் நடந்து, இறுதியில் அரசு அனுமதித்தது. கிருஷ்ணகிரியில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட தாமதமாவதாக கூறி விஜய் ரசிகர்கள் ஏராளமான பேர் அந்த பகுதியில் இருந்த பொது சொத்துக்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும்  பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள்.இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் அங்கு வந்து விஜய் ரசிகர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்…

கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் ரகளை

இதுதொடர்பாக போலீசார் ஏற்கனவே 32 பேரை கைது செய்தனர். இப்போது மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 7 பேர் சிறுவர்கள்.18 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 7 பேர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கும், 11 பேர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். யாரோ ஒரு நடிகரின் படத்தை பார்ப்பதற்காக இப்படி ரகளை செய்து, தங்கள் பிள்ளைகள் சிறைக்கு செல்வதை பார்த்த பெற்றோர்கள் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோர்ட் வாசல் முன் சோகத்துடனும், கண்ணீரும், கம்பலையுமாக நின்றிருந்தனர். இன்னும் சிலரோ தங்கள் முகத்தை வெளியே காட்டாத அளவுக்கு முடியபடி சென்றனர்.

கைது செய்யப்பட்ட விஜய் ரசிகர்கள்

இந்த விஷயத்தில் நடிகர் விஜய், இதுவரை வாய் திறக்கவே இல்லை. பேனர் விஷயத்தில், ‛‛என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் நான் சும்மா இருக்க மாட்டேன் என்கிற ரீதியில் பிகில் பட இசை வெளியீட்டில் பேசிய விஜய், தன் ரசிகர்களை இது போன்று செய்யாதீர்கள் என கண்டிக்கவில்லை., ஒரு அறிக்கை கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.