சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.

கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் திறக்காத நிலையில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் உலர் உணவுப் பொருள்களை நேரடியாக பல மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் உலர் பொருள்களை தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,கருப்பையா ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து சமூக இடைவெளியில் நின்று உலர் பொருள்களை வாங்கிச் சென்றனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.