திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டதால் வியாபாரம் இன்றி தவிக்கும் பூமாலை வியாபாரிகள்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்களின்றி கோயில் தெருக்கள், கடைகள் ஆகியவை வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் கோவிலில் வாசலில் பூமலை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வியாபாரம் இன்றி மிகவும் பரிதவிக்கின்றனர் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தலால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தினமும் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வியாபாரம் குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாக கூறுகின்றனர். சமுக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.