மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை சுற்றிலும் பயன் படுத்தப்பட்ட நோய் தடுப்பு உடைகள், முகக் கவசங்கள் குவிந்து கிடக்கின்றன. அவை முறைப்படி அகற்றப்படாமல் உள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புறநோயாளியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.உள் நோயாளிகளாக 1,000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர் . நோயாளிகளை பார்ப்பதற்காக உறவினர்கள் நாள் தோறும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். மேலும் மருத்துவர்கள் , செவிலியர்கள் , மருத்துவப் பணியாளர்கள், மாணவர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
தற்போது கொரோனா 2 வது அலை தீவிர மடைந்துள்ள நிலையில் , அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது . முகக்கவசம் அணியாதோருக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்படுகிறது . இந்நிலையில் மருத்துவ மனைக்கு வந்து வந்து செல்வோர் , தாங்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை முறைப் படி குப்பைத் தொட்டியில் போடாமல் , ஆங்காங்கே தரையில் வீசிய படி செல்கின்றனர் . இதனால், மருத்துவமனை முன்புள்ள பனகல் கால்வாய் முழுவதும் முகக்கவசங்கள், கையுறைகள், கவச உடைகள், குப்பையாக குவிந்துள்ளன . குறிப்பாக பஸ் – ஸ்டாப்பிலிருந்து மருத்துவக்கல்லூரி செல்லும் வரையுள்ள பனகல் சாலையில் முகக்கவசங்கள், கையுறைகள் சிதறிக் கிடக்கின்றன.இதனால் கொரோனா தொற்று தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது போன்று கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் களை பார்க்க வரும் உறவினர்கள் முகக்கவசங்கள், கையுறைகளை கீழே வீசிச் செல்வோரை கண்காணித்து அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது, சாலையில் குவிந்துள்ள முகக் கவசங்களை உடனடியாக அகற்ற மருத்துவமனை நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் கூடுதல் குப்பைத் தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தி : RavichandraN

														
														
														
Leave your comments here...